அயலவனை நேசிப்பவனை ஆண்டவனும் நேசிப்பான்!
முகமலர்ந்த சிரிப்பதனுள்
அகம் முறைத்த
சினம் புதைத்து
புஜமணைத்து
புறமுதுகில்
குத்துகின்ற
நிஜமில்லா
மனிதக்
குழுவில்,
புழுவாக நான்
நெளிகின்றேன்
வழியின்றிச் சிரிப்பணிந்து
வலிதாங்கி
வலிதாக்கி
மனமதனை.
No comments:
Post a Comment