Sunday, February 8, 2026

 ஏறுங்கள்!

ஏறுவதில் தப்பில்லை!


ஏற்றிவிடவும் கொஞ்சம் நேரமொதுக்கி ஏறுங்கள்!


தூக்கி விடவும் கொஞ்சம்

கைகொடுத்து உதவுங்கள்.


ஏறிப்பெற்ற கடதாசி உங்களிடம் மட்டுமிருப்பதிலில்லை பெருமை!


நீங்கள் ஏற்றிவிட்டவர்கள் எத்தனை பேரிடமுள்ளது என்பதில் இருக்கிறது பெருமை!


ஏறவந்தவர்களின் நேரம் களவெடுத்து

ஏறிப்போனபின் நீங்கள்!


கீழே ஏறமுடியாமல் ஏங்கி நிற்பவர்களின்

ஏக்கமுங்களை

சாபமாகித் தொடும் கவனம்.!


அதன்பின் ஏறியதிலும்

ஏறிப்பெற்திலும்

பயனின்றிப் போகும்!


அதனால் நீங்களும் ஏறிக்கொண்டு

கைகொடுத்து ஏற்றிக்கொண்டும்

 

வாங்குங்கள் பட்டத்தை.


ஆத்மதிருப்தியாயது

ஆகாயமேறிப் பறக்கும்

சுகமே தனி!


-தமிழினியன் பிரபாகரன்-

No comments:

Post a Comment