Wednesday, March 25, 2026

 அழுக்காற்று வெள்ளம்

பெருக்கெடுத்தோடும்

அழுக்குமிக்கவிவ்வுலகில்

அடுத்தவன் 

வாழப் பொறுக்காத

மனமதில்

கெடுத்தவனைத் 

தாழப் புதைக்க 

வழிதேடும் மனிதர்கள்

முகமதில் 

புன்னகையுமிழ்ந்து

புறமுதுகில் குத்தி 

தோளதில் 

கரமிட்டணைத்து!

காலிடறி விடும்

போலித்தனமான

முகமூடிக்குள்

மனிதங்களிங்கே

மலினமாகிக்கிடக்கே!


சுயநலமொன்றே

இலக்கிப்போயிங்கு

கிடைக்கும்

பயனனைத்தும்

தனக்கே தனக்கு மட்டும்

தானென்ற

நிலையில்

மனிதர்களிங்கே

ஐந்தறிவு

விலங்குகளாக

அவையோ

மனிதம்

விஞ்சிய

உயிர்களாய்

பரிணாமம்

கொள்கின்றன!


பிறக்காதவர்களே!

இங்கே பிறக்கா 

வரம் கேளுங்கள்!

இறந்தவர்களே!

விடுதலையென்று

மகிழ்ந்து

இளைப்பாறுங்கள்!

இன்னும் இருப்பவர்கள்

நாம் தான் பாவிகள்

நரன்களாளும்

நரகமதில்

இன்னும் 

மனிதம் பேணிவாழ

முடியாமல்

போராடுகின்றோம்!


-தமிழினியன் பிரபாகரன்-

No comments:

Post a Comment