Saturday, May 2, 2015

என் ஹைகூக்கள்

என் ஹைகூக்கள்

Post
ஆறாம் விரலாகி
உன் ஆயுள் பறிக்கும்
சிகரெட் !

ஆறாம் விரலானால் உன்
ஆற்றல் காட்டும்
பேனா!

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

மரணத்தின் மடிக்கொரு
முன் ஒத்திகை
நித்திரை!

கரையும் காகத்தையும்
குயிலாக்கும் உனக்கு
காதல்!

ஐந்து கோடி பேரில்
நூறு திருடர் தெரிவு
தேர்தல்!

கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

ஒரு நாள் வாழ்க்கையை
சிரித்து வாழும்
பூக்கள்!

-தமிழினியன்-

_________________________________________________

1 comment: