Monday, May 4, 2015

நிலா!



கடன் வாங்கிப் பூசிய வெளிச்சத்தில்

உடனிருக்கும் வழு மறைத்தவள் நீ!



உனைப்பார்த்துண்ட அன்னத்தில்

எனை வளர்த்த நன்றிக்காய் நீதி

மனையுன்னை இழுக்கேன் நான் !



பெண்ணவள் பாவம் உன் முகம் ஒப்பி

பண்ணினினில் பாட அவள் மயங்கினாளே !

இன்னுமுன் வெண்மை நிஜமென நம்பி

தன்னழகில் தானே திமிர் கொண்டாளே!



என்னவுன் மாயம் எள்ளளவுமுன் புகழீவு ஆகா

பென்னம்பெரும்பேறாய் கவியகராதியிலுவமைகள்

சின்னமாய் முதலிடம் பெற்றாய் ?அலுக்காமல்

உன்னை நான் என்பாக்கள்  பொருளினாய்

இன்னுமேன் கொள்கிறேன் சொல்நிலா



உன்னிலா என்னிலா ஊடல் நான் கொள்வது

தன்னிலா நிகரிலா உவமை நீ சொல்வது

என்னதான் சொன்நிலா நீ பிழையென்பது

பண்ணிலும் பொருளிலும் விதிவிலக்காவது

மண்ணிலே கவிஞர்கள் உன்னைமேல் பார்ப்பது

விண்ணிலே என்பதால் உன் வழுவுன்னில் மறைவது! 

-தமிழினியன்-




No comments:

Post a Comment