Friday, May 15, 2015

கடவுளைக் கண்டால்!

கடவுளைக் கண்டால்
கேட்பேன் ஒன்று!

ஆதாம் படைத்தாய்!
அவன் துணையாக
ஏவாள் படைத்தாய்!
இருவரும் வாழ
ஏதேன்ஸ் படைத்தாய்!

எல்லாம் சரி!?

இருந்தும் ஏன் நீ
சாத்தான் படைத்தாய்!?

என்னை நீயாய்ப்
பார்த்த போது
ஒன்று மட்டும்
புரியவில்லை!?

என் பிள்ளை காலில்
இடறும் என்று
அவன் வழி கிடக்கும்
கல்லைக் கூட
கவனமாய் நானும்
எடுத்து வீச!

உன் பிள்ளை
நாங்கள்
இடறி வீ ழ
நீயேன் கற்கள்
தூவிப்போட்டாய்!?

மூன்று காலமும்
முற்றும் உணர்ந்தவன்!
எல்லாம் முதலே
திட்டம் போட்டவன்!
போட்ட திட்டம்
நடத்தி முடிப்பவன்!

என்று பார்த்தால்
புரிவது என்ன!?

சாவான பாவம்
உன் திட்டம் தானா!?
சபித்தே மனிதனை
நீ படைத்தாயா!?

என்னுள் எனக்கேன்
இந்தக் கேள்வி!?
இதுவும் உன்முன்
திட்டம் தானா!?

-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்

No comments:

Post a Comment