Monday, May 4, 2015

மறைந்துயிர் போன உறையின் தானம் !





 நாத்திகனல்ல நானிதைச் சொல்ல
ஆத்திரமின்றி யோசித்துப் பாரீர்!
சாத்திரசடங்கு சம்பிரதாயங்கள்
போர்த்தி வளர்த்த பொய்யுடலங்கள் !

மூச்சடங்கியது  வீழ்ந்திட்ட பின்னும்
ஆச்சார சீலங்கள் ஆயிரங் காணும் !
குலச்சார உபசாரம் கொடுத்ததைக்கொண்டு  
அபச்சாரமாகவேன் குப்பையாய் கொழுத்துவான்?

மண்ணுக்கும் புழுவிற்கும் மக்கியது போகவா
கண்ணுக்கும் கருத்துக்கும் காத்ததை வளர்த்தது?
மன்னனிறைவனின் மாண்புறு படைப்பினில்
எண்ணயிங்கெதுவும் கழிவில்லை  கண்டீர் !  

மறைந்தும் மறையா வாழ்வென்னும் அறமே !
மறைந்துயிர் போன உறையின்  தானம் !
குறையோ பிழையோ இதிலொன்றுமில்லை –பாவக்  
கறைகள்  கழுவி  இறைசேருமான்மா!

மண்ணாய்க்  காற்றாய் மறைந்து போன  நமை  
எண்ணாதிறுதியில் மறந்து போவதை
கண்ணாய் கலமாய் தானம் செய்து நாம்
எண்ணா ஆயுளும் நீண்டு வாழ்வமே!

-தமிழினியன்-


No comments:

Post a Comment